இந்த ஆண்டும் கங்கார் தமிழ்ப்பள்ளி மறுசுழற்சிப் போட்டியில் முதலாம் இடத்தைப் பிடித்துச் சாதனைப் படைத்துள்ளது. மேலும், ஆசிரியர் திரு. அறிவானந்தன் இராஜமாணிக்கம் அவர்களுக்கு மாநில அளவில் “3R உத்வேக ஆசிரியர்” எனும் விருதும் வழங்கப்பட்டது. இந்த விருது 3R திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆசிரியர்களின் முன்முயற்சிக்காக வழங்கப்படும் முதல் விருதாகும். அதனைத் தொடர்ந்து, நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர் நந்தவரசன் அன்பரசன் அவர்களுக்கும் “ஹீரோ 3R” எனும் விருது வழங்கப்பட்டது. மறுசுழற்சிப் போட்டியில் வெற்றிப் பெற ஆதரவு வழங்கிய நம் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி. மறுசிழற்சி செய்வோம்; இயற்கையைப் பாதுகாப்போம்!!
Leave a Reply